ரவிராஜின் படுகொலைக்கு நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் காட்டம்!

266 0

aabb1a8827e8641f4efb611b234b5366_xlஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது சுட்டி நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் படுகொலை வழங்கின் தீர்ப்பை இதற்குப் பயன்படுத்தவேண்டாமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா அமர்விலும் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளமுடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குதர்க்கமான கருத்தை முன்வைத்திருந்தார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜெனீவா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பு, இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றபோதிலும், சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் இதற்குத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்.

அத்துடன், சிறீலங்காமீது ஐநாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மீளப்பெறுமாறு, புதிதாக பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்புக்கு கடிதமும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.