ஒழிக்க வேண்டியது எதிர்கட்சியை அல்ல டெங்கு தொற்றை – உதய கம்மன்பில

256 0

udaya1அரசாங்கம் எதிர்கட்சியை ஒழிப்பதற்கு பதிலாக டெங்கு ஒழிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளரும் கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் நாட்டுக்கு உண்மையாக செயற்பட வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும்.

தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.

அது என்ன வாக்குறுதி என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அரசாங்கம் அவ்வாறு என்ன வாக்குறுதி அளித்தது என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில் கோரியுள்ளார்.