மீனவர்கள் குறித்த பேச்சு வார்த்தை இடமாறுகிறது.

271 0

fisherman1இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது.

இந்த பேச்சு வார்த்தை முன்னதாக எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெறவிருந்தது.

எனினும் தற்போது இந்த பேச்சு வார்த்தை இந்த மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் டெல்லியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இருநாட்டு அமைச்சு மட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு, மீன்பிடித்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் நேற்று சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தின் சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் மூன்று பேரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்யுமாறு, இலங்கை இந்திய மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அமைப்பின் தலைவர் என் தேவதாஸும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் மத்திய அரசாங்கத்திடம் இவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.