மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்

262 0

cope-sunil-handunneththi-720x480மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கோப் குழுவின் தலைவரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் அறிக்கை மீது விவாதத்தை நடத்துவது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் உடனடியாக கூட்டவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களினூடாக வெளிப்படும் கருத்துகள் மற்றும் ஆவணங்களில் உள்ள விடயங்கள் என்பவற்றை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான பொறிமுறை குறித்து ஆராய வேண்டும்.

இந்தப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் மீதும், கோப் குழுவின் அறிக்கை மீதும் மக்கள் சந்தேகம் கொள்ளும் நிலைமை ஏற்படும்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.