பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்கள்

253 0

420835902udayaஅடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்ளை வழங்குவதற்கு கல்வியமைச்சு ஆயத்தமாகி வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருந்தபோதிலும் கல்வியமைச்சு இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எமது செய்திப் பிரிவு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் விளக்கம் கேட்க முற்பட்ட போது, அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதால் இந்த விளக்கத்தை பெறமுடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.