முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

359 0

mullaitivuமுல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை ரீதியாக போராடிய தியாகி திலீபன்,  திலீபனுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதமிருந்து ஆபத்தான நிலையில் காப்பற்றப்பட்ட திருச்செல்வம் ஆகியோருக்கு சிலை அமைப்பதை விடுத்து காந்திக்கு சிலை அமைப்பதன் அவசியம் என்ன?

அகிம்சையினைப் போதித்த காந்திக்கு முல்லைத்தீவில் அவசர அவசரமாக முல்லைத்தீவில் சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. முல்லைத்தீவிற்கு காந்தி என்ன செய்தார்?  என குறித்த சிலை அமைப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த நிலையில் குறித்த காந்தி சிலை இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.