நாடுகடத்துவதர்கு எதிராக கால்சுறு (Karlsruhe) நகரத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல்.

479 0

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற இனவழிப்பில் இருந்து தத்தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள யேர்மன் நாட்டின் ஏதிலி கோரிக்கைக்காக விண்ணப்பித்த தமிழர்களை மனிதநேயமின்றி கொலைக்களமான இலங்கை நாட்டிற்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கண்டித்து நேற்று போர்ஸ்கைம் (Pforzheim) நகரத்தில் தமிழர்களால் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.

அதன் தொடற்சியாக 07.06.2021 அன்று கால்சுறு (Karlsruhe) நகரத்தில் காலை 10:30 மணியில் இருந்து 12:00 மணிவரை கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது. இந்த கண்டன ஒன்றுகூடலில் இடது சாரி கட்சியின் (Die Lnke) அங்கத்துவருமான யோகானஸ் (Johannes) என்பவருடன் ஏதிலிகளுக்கான உதவி நிறுவனம் (Flüchtlingshilfe Karlsruhe e.V.)சார்பாக திருமதி வெயபர் (Frau Weber) மற்றும் சட்டத்தரனியான திருமதி கீஸ்ல (Frau Kiechle) என்பவரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கண்டன ஒன்றுகூடலில் ‘தமிழர்களை ஏன் இலங்கை நாட்டுக்கு திருப்பி அனுப்ப கூடாது’ என்ற விளக்கம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வேற்றின மக்களுக்கு வழங்கி விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக தமிழரின் தாரக மந்திரத்துடன் இன்றைய கண்டன ஒன்றுகூடல் நிறைவுப்பெற்றது.

தொடற்சியாக நாளை 08.06.2021 அன்று 11:00 மணிக்கு புறுக்சால்(Bruchsal) நகரத்தில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தற்கதாகும்.