தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் இன்று (வியாழக்கிழமை) காலை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர், நீதவான் ஏ.டப்ளியூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவருக்குமே இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

