இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்தியாவின் சென்னைக்கு நேற்றைய தினம் சென்ற பிரதமர், அங்கிருந்து திருப்பதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று அதிகாலை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பிரதமர் ரணில் விக்ரசிங்க திருப்பதி சென்றதையடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

