கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து அங்கு உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்ட செலயக உத்தியோகத்தர்களால் பல்வேறு விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மாவட்டச் செயலகத்தின் தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாவும், உரிய நடவடிக்கை எடுப்பதாவும் தெரிவித்துள்ளார்.

