வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்;படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக உரையாற்றும் போது இதனைக்குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் பால் உற்பத்தியின் அதிகரிப்பு, பசுக்களின் அதிகரிப்பு, கோழி வளர்ப்பில் எற்பட்ட முன்னேற்ற நிலைமைகள் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான முட்டைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

