முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்தழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராகவே உள்ளார்.
கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு மஹிந்தவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
அவர் ஒத்துழைக்க வேண்டியது அவரின் கடமையாகும்.
அவர், தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவாரா, வழங்கமாட்டாரா என்பது குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை.
இந்த தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, இந்த அழைப்பை ஏற்று ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

