யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக 80 ஆயிரம் குடும்பங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டார்.

