நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியினை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவ்வரிசியினை முறையாக சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

