தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடாத்தியது தமிழகத்தில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது.
அவரிடமிருந்து சில இலட்சம் பணங்கள் மற்றும் தங்க நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து, ராம் மோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் புகாரில் சிக்கிய ராம் மோகன் ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தற்போது தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

