மஹிந்த அணியினருக்கு அழைப்பு

270 0

thumb_joint-opposition-maithripala-sirisenaதங்களுடன் இணைந்து செயற்படுமாறு, மஹிந்த அணியினருக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து சிறிலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சுதந்திர கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

இதற்காக கட்சியினுள்ளேயே ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இதனை விடுத்து ஒன்றிணைந்த எதிர்கட்சி என்றும், ஏனைய வகைகளிலும் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.