இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்று, மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த போது, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை ஜீ.எல்.பீரிஷ் மறுத்துள்ளார்.

