வடமாகாணத்தில் மழை நீர் சேமிப்புத் திட்டம் ஒன்றை அமுலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினை நிலவுகிறது.
இதனை தணிக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

