மலேசிய தூதுவர் குறித்த வழக்கு

379 0

maxresdefault-300x169மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் தாக்கப்பட்டமை குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மலேசிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி அவர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் கைதானவர்கள் பிணையில் சென்றுள்ள நிலையில், மீண்டும் அவர்களது வழக்கு விசாரணை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.