அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்

366 0

1578793844strike14 கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் நண்பககல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையான மதிய உணவு வேளையில் சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் பி திலகரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் அந்த ஆர்ப்பாட்டத்தினால் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என்று அவர் கூறினார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளை தெளிவுபடுத்திய போதிலும் அவர்கள் சிறந்த பதிலை வழங்காததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அஜித் பி திலகரத்ன கூறினார்.