ஜேர்மன் சம்பவம் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

296 0

1438821889untitled-1ஜேர்மனின் பர்லின் நகரில் இடம்பெற்ற சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வினவிய போது வௌிவிகார அமைச்சின் செயலாளர் பிரகாஷிகா மகேஷினி கொலன்னாவ இந்த விடயத்தைக் கூறியுள்ளார். நேற்று இரவு ஜேர்மன் நகரில் கிருஸ்மஸ் சந்தைத் தொகுதியில் லொரியொன்று புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் பலியானதோடு 50 பேர் வரை காயமடைந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே குறித்த சந்தைத் தொகுதி உள்ளது. அங்கு உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்தனர். இந்தநிலையில் இரவு 08.00 மணி அளவில் அங்கு அதிவேகமாக வந்த ஒரு லொரி, நிற்காமல் வர்த்தக தொகுதிக்குள் புகுந்து சுமார் 50 முதல் 80 அடி தூரத்துக்கு சரமாரியாக மோதியது.

இதற்கிடையே இச் சம்பவம் விபத்து அல்ல. தீவிரவாதிகளின் தாக்குதல் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த லொரியை ஒட்டியவர் ஒரு அகதி. இவர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் இருந்து பெப்ரவரி மாதம் ஜேர்மனி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஜூலை 14-ம் திகதி நைஸ் நகரில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கூட்டத்தில் லொரி மோதி 86 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர் என பின்னர் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.