நீதி சுயாதீனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

351 0

d2089fe358e600c317e3969526bf7aeaநீதித் துறையில் உள்ள அனைவருக்கும் நியாயமான வேதன முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வத்தளையில் நடைபெற்ற நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையை அரசாங்கம் விளங்கிக் கொண்டுள்ளது.

சுதந்திரமாக பக்கசார்பின்றி தமது சேவையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அந்த துறையில் உள்ள அனைத்து பதவியினருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான சம்பள முறைமையொன்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கையை நல்லாட்சி பெயர்ப்பலகையுடன் மட்டுப்படுத்திவிடாது நீதித்துறை, அரச சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கவேண்டிய சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் பக்கசார்பின்மையையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.