அமைச்சரின் மகனுக்கு பிணை

242 0

supreme-court-gavel-2-e1477390217750வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் ஒசந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கான பிணை அனுமதியை இன்று வழங்கியது.

கடந்த தினம் கொழும்பு – கருவாத்தோட்டம் பகுதியில் அவர் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்றுடன் மோதிய உந்துருளி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருவாத்தோட்டம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போது, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.