கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஜந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் குறித்த குழந்தையை நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே குழந்தை இறந்தே காணப்பட்டதாக வைத்தியசாலையினா் தெரிவிக்கின்றனா்.
இதன் பின்னா் உடற்கூற்று பாிசோதனையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகதரியும், திடீர் மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தியும் மேற்கொண்டுள்ள பின்னா் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

