ஜப்பானிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் இலங்கையில்

251 0

a1702c8fc5dd24cb2ed79c9ce8ed72c3_lஜப்பானிய நாடாளுமன்ற பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயூக்கி மியாசாவா உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் அரசியல் மட்டத்திலான முதலாவது விஜயம் இது என தெரிவிக்கப்படுகிறது.

இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த காலப்பகுதியினில், அவர் இலங்கை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன உள்பட பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என ஜப்பானிய தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.