கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல்

233 0

dhdyeyeyகையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தீர்வையற்ற முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்; அனுமதிப் பத்திரத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றமை தொடர்பில் நாகாநந்த கொடித்துவக்கு கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவினால் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தே அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் கபீர் ஹாஸிம், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் மற்றும் 93 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.