முறையற்ற சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

222 0

maithiri1சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜா எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களினூடாக பலரும் பல்வேறு விதமாக நிந்தனைகளுக்கு உட்படுகின்றனர்.

சமூக வலைதளங்களின் சுதந்திரத்தை பலரும் தவறான வகையில் பயன்படுத்துகின்றனர்.

அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களினூடாக தரக்குறைவாக விமர்சிப்பது சாதாரண விடயமாக மாறியுள்ளது.

எனினும், சாதாரண பொது மக்களின் வாழ்க்கையில் அது புதிய சவாலாக அமைகின்றது.

சுதந்திரம் என்பது நல்ல சமுதாயத்தைக் கொண்ட நல்ல மனிதர்களுக்கான உரிமையாகும்.

எனினும், சில தீயவர்கள் அந்த உரிமையை தவறான முறையில் கையாள்கின்றனர்.

எனவே, இவ்வாறான விடயங்களைத்தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.