மஹிந்த அணியுடன் சுதந்திர கட்சியினர் இணையும் காலம் உருவாகியுள்ளது – வெல்கம

214 0

kumara_welgama-720x480தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மஹிந்த அணியினருடன் இணையும் காலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி 2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரும் உடன்படிக்கையொன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை.

சுதந்திரக் கட்சியினரே ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஆட்சியிலிருந்து வெளியேறுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.