தேர்தல் பிரசார செலவீனங்களுக்கு வரையறை வேண்டும் – பெப்ரல்

247 0

paffrelவேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்யும் பணத்துக்கு வரையறையொன்றை நிர்ணயிப்பதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்தின்போது அதிகளவு பணத்தை செலவு செய்கின்றனர்.

இதனால், அதிக நிதி வல்லமை கொண்ட வேட்பாளர்களுக்கு தேர்தலில் சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகின்றது.

இந்த பிரசார நடவடிக்கையானது ஜனநாயக தன்மைக்கு அப்பாற்பட்டதாக அமைகின்றது.

எனவே, தேர்தல் பிரசாரங்களின்போது வேட்பாளர்கள் செலவு செய்யும் பணத்தை வரையறை செய்வதற்கான சட்டவரைவு ஒன்று உருவாக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்துரையடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.