அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை – நுகர்வோர் அதிகாரசபை

546 0

news-athavan1-720x480-300x200அதிகரிக்கப்பட்டுள்ள அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்று இருந்ததாக நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த கட்டுப்பாட்டு விலைக்கு அமைய அரிசியை வழங்க முடியாத காரணத்தால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கிக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோ 90 ரூபாவிலிருந்து 95 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 95 ரூபா வரை அதிகரிக்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பண்டிகை காலங்களில் அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதங்காக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்ய நெல் கொள்வனவு சபை தீர்மானித்துள்ளது.

தற்போது நெல் கொள்வனவு சபை 9 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லை களஞ்சியப்படுத்தியுள்ளது.

இதிலிருந்து ஒரு தொகை நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு வழங்கவுள்ளதாக நெல் கொள்வனவு சபைத் தலைவர் எம்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, அதிகரித்துள்ள அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக 10 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.