தொழிற்சாலைகளின் நச்சுத் தன்மை வாயுக்களினால் வளி மண்டலம் பாதிப்பு

261 0

envi_pollution_intro_clip_image006இலங்கையில் உள்ள 13 ஆயிரத்து 500 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மையுள்ள வாயுக்களினால் வளி மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் காற்றின் தன்மை குறித்து ஆராயும் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

காற்று மாசுபாட்டை தவிர்ப்பதற்கு நச்சுத்தன்மை அற்ற வாயுக்களை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள் தொடர்பில் தர நிர்ணய மட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்;;.