பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – ஜே.வி.பி

242 0

anura-kumaraஇலங்கையின் வளங்களை விற்பனைசெய்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு குருநாகலில் இருந்து ஹபரனைக்கு தொடரூந்து வீதியொன்று அமைக்கப்படுகின்றது.

இந்த செயற்பாடானது துறைமுகத்தை விற்பனை செய்து தொடரூந்து வீதி ஒன்றை அமைப்பதாக அமைகின்றது.

ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் வளங்களை விற்பனை செய்து தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்த முயற்சியின் பலன்கள் தற்காலிகமானது.

அரசாங்கத்தின் இத்தகைய பொருளாதார கொள்கைகள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வலிவகுக்கும் என அனுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.