யாழ்ப்பாண மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்

280 0

jaffnaதேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 10 தேர்தல் பிரதேசத்தில் வெற்றி பெற்றவர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளும் வெளியிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிரதேசத்திற்குரிய வெற்றி பெற்ற வேட்பாளராக அபுபக்கர் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிறேமகுமார் பானுஜன் 182 வாக்குகளையும், ஆசீர்வாதப்பர் வீதி அரியாலையைச் சேர்ந்த திருச்செல்வம் மயூரன் 257 வாக்குகளைப்பெற்று நல்லூர் தேர்தல் பிரதேசத்திற்குரிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் தேர்தல் பிரதேசத்திற்குரிய வெற்றி பெற்ற வேட்பாளராக செபமாலைநாதன் றொபின்சன் 469 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வட்டுக்கோட்டை தேர்தல் பிரதேசத்திற்குரிய இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியாக சுழிபுரம் கிழக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த அன்ரன் யோகராசா இன்பராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 224 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

காங்கேசன்துறை பிரதேசத்திற்குரிய இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியாக சித்தியம் புளியடி தெல்லிப்பழையைச் சேர்ந்த ஐயாத்துரை மதுசன் 235 வாக்குகளைப்பெற்று காங்கேசன்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேசத்திற்குரிய இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியாக 179 வாக்குகளைப்பெற்று இரவிச்சந்திரன் பகீரதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார், இவர் அச்செழு நீர்வேலியைச் சேர்ந்தவராவார்.

உடுப்பிட்டிக்குரிய இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியாக பேரின்பநாதன் பிரசாத் வெற்றியீட்டியுள்ளார். இவர் மலையந்தோட்டம் கொற்றாவத்தை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இவர் 217 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

உதயகுமார் நிதர்சன் பருத்தித்துறை தேர்தல் பிரதேசத்திற்குரிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக 351 வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டியுள்ளார். இவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்குரிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தம்பிராசா அருட்கரன் 163 புள்ளிகளைப்பெற்று வெற்றியீட்டியுள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த இவர் சாவகச்சேரி சீமா இளைஞர் களகத்தைச் சேர்ந்தவர்.

ஊர்காவற்றுறை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக 374 வாக்குகளைப்பெற்று ஊர்காவற்றுறையைச் சேர்ந்த எமல்டன் ஞானகரன் லக்ஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.