சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம் -நிதியமைச்சு

337 0

banenrimgசுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு தற்போது கூடுதலான வருமானம் கிடைத்து வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.2016 ஆம் ஆண்டின் முதல் 07மாதகாலப் பகுதிக்குள் 11 இலட்சத்து 75 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 16 தசம் 7 சதவீத வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வருடத்தின் முதல் 07 மாதங்களுக்குள், சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டுக்கு 194 கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் 166 கோடி 70 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இந்த வருமான அதிகரிப்பிற்கு காரணமாகும் என்று நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இந்தியா, சீனா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.