விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்- றுவினி பிம்புரகே

223 0

download-3விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர் திருமதி றுவினி பிம்புரகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களுக்குள் விசர் நாய்க்கடி நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பதாக, பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர் திருமதி றுவினி பிம்புரகே களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

1970 ஆம் ஆண்டுகளில் விசர் நாய்க்கடி நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.இதுவே 2014ஆம் ஆண்டில் 19 ஆக குறைந்தது.

கடந்த வருடத்தில் இந்த நோயினால் 14 பேர் மாத்திரமே உயிரிழந்திருப்பதாக பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.