இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸாரால் கைது

243 0

daily_news_1609569787980சென்னையிலிருந்து இராமேஸ்வரன் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றின் பிரகாரம் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து இராமநாதபுரம் நோக்கி வந்த தனியார் பஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த பஸ்ஸில் பயணித்த இருவர் மீது பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.அதையடுத்து குறித்த நபர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் நடாத்தி வருகின்றனர்;.