ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே. கணேசராஜா, ரீ.கணேசநாதன் மற்றும் கே.அரசரட்னம் ஆகியோர் இவ்வாறு மீளவும் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்த அதிகாரிகள் மீள நியமிக்கப்பட உள்ளனர்.ஆறு மாத காலத்திற்கு இவர்கள் சேவையாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கே. அரசரட்னம் கிழக்கு மாகாணத்திலும், ரீ.கணேசநாதன் வடக்கு மாகாணத்திலும்கே,.கணேசராஜா நீர்கொழும்பு மாவட்டத்தில் கடமையாற்ற உள்ளார்.

