நாளை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம்

643 0

download-2ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்து நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.