அதுருகிரிய – மாலபே வீதியின் 10 ஆம் மைகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலியாகினர்.
உந்துருளிகள் 2 நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 29, 26 மற்றும் 22 வயதுகளையுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுள் பெண்ணொருவர் மற்றும் இராணுப படைப்பிரிவில் பணியாற்றும் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

