கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலை மாணவன் ஒருவன் க.பொ.தசாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வரும்போது, அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மாணவனை சேட்டில் பிடித்து அச்சுறுத்தியதுடன், தாக்கினார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண நிராகரித்துள்ளதுடன், அந்த மாணவனை தான் சந்திக்கவோ, தாக்கவோ இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு வெளியே மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் சகோதரியின் மகன் இன்னொரு மாணவனால் தாக்கப்பட்டமை தொடர்பாக, காவல்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவ்விடத்திற்குச் சென்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தனது சகோதரியின் மகனை தாக்கிய மாணவனை மிரட்டித் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

