ஒசாமா பின்லாடனின் மகனுக்கு எகிப்து அனுமதி மறுப்பு

385 0

osaman-liveஒசாமா பின்லாடனின் புதல்வர் ஓமார் நேற்று எகிப்திற்கு செல்ல முனைந்த போது தடுக்கப்பட்டார்.

எகிப்திய குடிவரவு அதிகாரிகள், அவரை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தனர்.

இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தகவல் எதனையும் வெளியிடாத போதிலும், எகிப்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவரின் பெயர் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒசாமா பின்லாடனின் நான்காவது புதல்வாரன இவர், தமது பிரித்தானிய குடியுரிமைக் கொண்ட பாரியாருடன் சென்ற நிலையிலேயே இந்த முறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களை துருக்கிக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி பாக்கிஸ்தானில் உள்ள ரகசிய மாளிகையில் பதுங்கியருந்த போது அமெரிக்க கொமாண்டோ படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.