இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில்

346 0

dsc08914இலங்கையின் 4வது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்புத் தொகுதியில் இருந்து 14 பேரும் கல்குடாத் தொகுதியில் இருந்து 20 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் இருந்து 11 பேரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மட்டக்களப்புத் தொகுதியில் 6,185 பேரும் கல்குடாத் தொகுதியில் 5,355 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 4,456 பேருமாக மொத்தம் 15,996 இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 21 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

dsc08915 dsc08913 dsc08914 dsc08915 dsc08916 dsc08917 dsc08918 dsc08919 dsc08920 dsc08921 dsc08922 dsc08923 dsc08924 dsc08925