முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் பிரச்சினை கிடையாது-ரவூப் ஹக்கீம்

286 0

5990750-3x2-940x627ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட பேராளர் மாநாட்டில் யாப்பு திருத்தம் செய்யப்பட்டு, செயலாளர் நாயகம் பதவிக்கு புறம்பாக உயர்பீட செயலாளர் என்ற பதவியொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டிருந்த தேர்தல் செயலகத்துடனான தொடர்பாடல்;, தேர்தல் வேட்பு மனுக்களில் கையொப்பமிடுதல் போன்ற உரிமைகள் உயர்பீட செயலாளருக்கு கிடைக்கும் வகையில் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அது தேர்தல் செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அதிகாரங்களை அப்போது பெற்றிருந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, இந்த விடயம் குறித்து அதிருப்தி அடைந்திருந்த நிலையில், அது குறித்து தேர்தல்கள் செயலகத்திற்கு ஆட்சேபனையை முன்வைத்திருந்தார்.

இந்த பின்னணியில், குறித்த சர்ச்சை தொடர்பில் தெளிவுப்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வரை காலவகாசம் வழங்கியிருந்தது.

இதன்படி, பேராளர் மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.