தற்போதைய அரசாங்கம் எனக்கெதிராக குரோத மனப்பான்மை

369 0

315150943maaaஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக தான் தற்போதைய அரசாங்கத்திற்கு குற்றவாளியாகி மாறி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனக்கெதிராக குரோத மனப்பான்மை கொள்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறுகின்றார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் நல்லாட்சி இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.