சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி

378 0

சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய வந்த தனியார் வேன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று சங்காத்தனை ஆதார வைத்திய சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.

இதில் 10 பேர் பலியானதுடன் மேலும் சில காயங்களுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணையினை சாவகச்சேரி பொஸிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்படி, வேகக் கட்டுபாடுகள் இன்றி செயற்பாட்டமையே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.