கம்பஹா – மெதகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உக்ரைன் நாட்டு பெண் பிரஜையொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்துள்ள உக்ரைன் பிரஜையான குறித்த பெண் 66 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இதற்கு முன்னர் பல தடைவைகள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

