யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

357 0
image-0-02-06-14e64a5053d4db0b6b83829d9cee5e441580a0a3fbef46ce850f69b858bca89f-vபாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.யாழ்ப்பாணத்தில்  தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே இன்றையதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த ஜெலிகளை மீளப்பெறுமாறும் கால அவகாசம் வழங்கினார்.

இது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் வசந்தசே கரன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜெலியில் தூசுக்கள் காணப்படுவதாக எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் எமது இரு உறுப்பினர்கள் யாழ் மாவட்டங்களில் பரவலாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது தூசுகள் உள்ள ஜெலிகளும் இறந்த நிலையில் பூச்சிகளுள்ள ஜெலிகளுமாக 35 சான்றுப்பொரு ட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடனடியாக குறித்த ஜெலி  நிறுவனத்தினர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் சகல ஜெலி பைக்கற்றுக்களையும் அகற்றும்படி அறிவுறுத்தல் கொடுத்தோம் எனினும் அவர்கள் முழுமையாக அவற்றை அகற்றவில்லை மீண்டும் தமது பொருட்களை களஞ்சியப்படுத்தினர்.

இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரனை இன்று மன்றில் எடுத்துக்கொள்ள ப்பட்டது இதன் போது  தூசுகள் உள்ள ஜெலிகளையும் இறந்த நிலையிலுள்ள பூச்சிகளுள்ள ஜெலிகளையும் விற்பனை செய்யப்பட்டமை எளிதில் மாற்றக்கூடிய வகையில் காலாவதி திகதி பொறிக்கப்பட்ட அட்டைகள் உள்ளமை போன்ற முறைப்பாடுகள் நிறுவனத்திற்கும் முகவருக்கும் எதிராக பாவனையாளர் அதிகார சபையால் முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் உடனடியாக குறித்த நிறுவனத்தால் நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜெலிகளை நிறுவனம் அகற்றவேண்டும் எனவும் இதனை  அதிகார சபை கண்காணித்து இது தொடர்பில் வருகின்ற தை மாதம் 17 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் உடனடியாக ஜெலிகளை நிறுவனம் அகற்றாவிடின் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் எனவும் உத்தரவிட்டதுடன்  தூசுகள் உள்ள ஜெலிகளை விற்பனை செய்ததற்காக 1 லட்சம் தண்டப்பணமும் பூச்சிகளுள்ள ஜெலிகளை விற்பனை செய்ததற்காக 50000 ருபாய் தண்டப்பணமும் மன்றினால் அறவிடப்பட்டது.

 

image-0-02-06-e6d40cbacb6db5f90a4c954bc07f3bd56558e6de8f7e56dafa914019c7c8af21-vimage-0-02-06-aee9abb05fa32bd61d671d398d5b082fe4b4f77b0602db684f6ee0f34b11a9ba-vimage-0-02-06-14e64a5053d4db0b6b83829d9cee5e441580a0a3fbef46ce850f69b858bca89f-vimage-0-02-06-83e4f690cefba87b81cf156914fed1f806f6d01befda96993279af83fa9e7d3e-vimage-0-02-06-2cd1261712654b807a85020d8a5d45ca6173d0e10cf385118761af007cf1e3b7-vimage-0-02-06-7ec138f980c21a55a3cf6600e1b1ad2a332fb2b9ddc1ceb0c4c789a3f79d6660-v