பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்த ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைப்பதற்கு எதிரான தடையுத்தரவு நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிவரை குறித்த தடையுத்தரவை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த காலத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையின் கீழ் பொருளாதார கேந்திர நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய இராணுவத்தினரை அகற்றி நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பு தேவையின் நிமித்தம் அத்தகைய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

