காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்று 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, அதிசொகுசு வீடு ஒன்று தொடர்பிலான விசாரணையே அவரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மீண்டும் குறித்த வீடு தொடர்பிலான விசாரணைக்கு அவர் அழைக்கப்படுவார் என, FCID அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை விமர்சித்தமையினாலேயே தாம் திட்டமிடப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

