பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனைத் தாக்க முயன்றார் என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்திற்கருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராவய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
க.பொ.த. சாதாரண தரத் தேர்வு எழுதும் குறித்த மாணவன் கணித பாடத்தில் தனது முதலாவது பகுதியை முடித்துவிட்டு வரும்போதே மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண அந்த மாணவனின் சேட்டைப்பிடித்து இழுத்து மிரட்டியதுடன், தாக்கவும் முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தேர்வு முடிவடைந்ததும், அம்மாணவனை அழைத்துச் சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காவல்துறையில் முறையிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இணையத் தளங்கள் தனக்கெதிராக அடிப்படையற்ற, குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஒரு மாணவனையும் தாக்கவில்லையெனவும், தான் இராணுவத்தில் இருந்தபோதுகூட எந்தவொரு இராணுவ வீரரையும் தாக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

